INTERIOR DESIGN 1. Conceptual Design 2. Finish Selection 3. Furniture Selection 4. Material Selections & Recommendation 5. Approval of Contractors and Vendors 6. Project Execution Co-ordination 7. Project Analysis
Tuesday, 5 September 2017
"இண்டீரியர் பற்றி பேசுவோம்" - இண்டீரியர் வேலைகளில் WPC போர்டு பங்களிப்பு மற்றும் பயன்கள்
"இண்டீரியர் பற்றி பேசுவோம்" - இண்டீரியர் வேலைகளில் WPC போர்டு பங்களிப்பு மற்றும் பயன்கள்
இண்டீரியர்ல ஒரு சிறிய பகுதியான மர வேலைகளை பற்றியும் அதற்கு பயன்படும் மாற்று பொருளான WPC போர்டு பற்றியும் இங்கு பேசலாமென நினைக்கிறேன். மரத்திற்கு மாற்றாக நாம் தற்காலங்களில் பயன்படுத்தும் ஒரு பொருள்தான் இந்த ப்ளைவுட். ப்ளைவுட் பற்றி பேசும்போது அதிலும் மரத்தினுடைய பயன்பாடு அடிப்படையானது மரமில்லாமல் பிளைவுட் இல்லை. இதை தாயாரிக்கவும் நாம் மரத்தையே பயன்படுத்த வேண்டியதன் பொருட்டு மரத்தை அழிக்கவேண்டியுள்ளது.
புவி வெப்ப மயமாதல் ( குளோபல் வார்மிங் ) காரணமாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் மரத்திற்கு மாற்றான பொருளை பயன்படுத்துவதின் அவசியத்தை உணர்ந்து பலவழிகளில் மரத்தினை பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களுக்கு மாற்றன பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பவர்களுக்கு முன்னுரிமையும், வியாபார முன்னேற்றமும் எளிதில் கிடைக்கும் படியான வாய்ப்பு வசதிகள் உள்ளது. இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த பொருட்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு அது நன்மையாகவே அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
இது மரத்துக்கு மாற்றாக இண்டீரியர் வேலைகளில் பயன்படும் பொருளாக இன்று இருப்பது WPC போர்டுகள். இந்த போர்டுகள் பார்ப்பதற்க்கு ப்ளைவுட்க்கு மாற்றான தோற்றமென்பது உங்களுக்கு புரியும். இது வெண்மை மற்றும் IVORY நிறங்களில் காணக்கிடைக்கின்றன. பிரபலமான பல முன்னணி நிறுவனங்களும் இதன் தயாரிப்பில் இறங்கிவிட்டன. உதாரணமா SINTEX இது பிளாஸ்டிக் பொருட்களுக்கான தயாரிப்பில் பல ஆண்டுகள் முன்னோடி நிறுவனமான இது WPC போர்டு தயாரிப்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டு தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளில் கால் பதிக்கத்தொடங்கியுள்ளது.
இந்த WPC போர்டுகள் வெண்மை நிறத்தில் கிடைப்பதால் இதன் ஒரு பகுதியில் மட்டுமே மைக்கா பயன்படுத்தினால் போதுமானது இதன் மூலமாக நாம் செலவை குறைக்கமுடியும் மேலும் இதற்க்கு SCREW பயன்படுத்துவதன் தேவை அதிகமில்லை மாற்றாக ஓட்டும் பிசின்களையே பயன்படுத்தி வேலையை குறைந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும் மேலும் வேலை செய்வதற்கும் அதிக கடினமில்லையாதலால் பணியாளர்கள் பணியை திறம்பட குறித்த நேரத்திற்கும் முன்பாகவே முடிக்கும் தன்மையை பணியாளர்களிடம் காணலாம்.
WPC இண்டீரியர் வேலைகளில் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் சில
1. மரத்தூசியினால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தீர்வு
2.தயாரிக்கும் பொருட்களில் நேர்த்தி மற்றும் நீடித்த உழைப்பு
3.வளைவு மற்றும் மடிப்பு போன்ற டிசைன் செய்வதற்கு ஏதுவானது
4.கரையான் மற்றும் பூச்சிகளின் பாதிப்பிலிருந்து நிரந்தரமான விடுதலை
5.தண்ணீரில் கிடந்தாலும் ஊராதன்மை
மேலும விபரங்களுக்கு...
அனைத்து விதமான இண்டீரியர் வேலைகள் தரமான பொருட்கள் மற்றும் கைதேர்ந்த பணியாளர்களை கொண்டு குறித்தநேரத்தில் செய்து கொடுக்க.
சிக்ஸ்போர்64 இண்டீரியர்ஸ் ( SIXFOUR64 INTERIORS )
சென்னை
9677230594 / 044-27465600
Subscribe to:
Posts (Atom)